உள்ளடக்கத்துக்குச் செல்

ஆல்பர்ட் கியோர்சோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆல்பர்ட் கியோர்சோ
1970 ஆம் ஆண்டல் ஆல்பர்ட் கியோர்சா
1970 ஆம் ஆண்டல் ஆல்பர்ட் கியோர்சா
பிறப்பு சூலை 15, 1915
வாலேஜோ, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இறப்புதிசம்பர் 26, 2010(2010-12-26) (அகவை 95)
பெர்க்கிலி, கலிபோர்னியா, U.S.
தேசியம்அமெரிக்கர்
துறைஅணுக்கரு இயற்பியல்
நிறுவனம்லாரன்சு பெர்க்லி தேசிய ஆய்வகம்
அறியப்பட்டதுவேதித்தனிமங்கள் கண்டுபிடிப்பு
பரிசுகள்2004 வாழ்நாள் சாதனையாளர் விருது (கதிரியக்க வேதியியல் கழகம்),[1] தி போட்ஸ் பதக்கம் (பிராங்க்ளின் நிறுவனம்), ஜி. டி. சியர்ள் அண்ட் கோ விருது (அமெரிக்க வேதியியல் கழகம்), கௌரவ முனைவர் பட்டம் (கஸ்டாவஸ் அடோல்பஸ் கல்லூரி), ஆய்வாளர் (கலை மற்றும் அறிவியல் அமெரிக்க அகாதெமி), ஆய்வாளர் (அமெரிக்க இயற்பியல் கழகம்), உலக சாதனைகளுக்கான கின்னஸ் புத்தகம் (அதிக தனிமங்கள் கண்டுபிடிப்பு)

ஆல்பர்ட் கியோர்சோ (ஜூலை 15, 1915 - டிசம்பர் 26, 2010) ஒரு அமெரிக்க அணுசக்தி அறிவியலாளரும் தனிம அட்டவணையில் 12 தனிமங்களைக் கண்டுபிடித்த இணை கண்டுபிடிப்பாளரும் ஆவார். அவரது ஆராய்ச்சி வாழ்க்கை 1940 களின் முற்பகுதியிலிருந்து 1990 களின் பிற்பகுதி வரை ஆறு பதின்ம ஆண்டு காலம் நீடித்தது.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

தொடக்க கால வாழ்க்கை

[தொகு]

கியோர்சோ 1915 ஆம் ஆண்டு சூலை 15 ஆம் நாள் கலிபோர்னியாவில் இத்தாலிய மற்றும் எசுப்பானிய வம்சாவளியில் பிறந்தார்.[2] இவர் ஆலமீடாவில் வளர்ந்தார். ஒரு பதின்பருவத்தினராக, இவர் கதிரியக்க சுற்றிணைப்பை இராணுவ பயன்பாட்டிற்கு வெளியே அமைத்ததன் காரணமாக புகழ் பெற்றார்.[3]

இவர் மின் பொறியியலில் தனது இளம் அறிவியல் பட்டத்தை (பெர்க்லி) கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1937 ஆம் ஆண்டில் பெற்றார். தனது பட்டப்படிப்பிற்குப் பிறது இவர் அரசிற்கு கதிரியக்கக் கண்டுபிடிப்பான்களை விநியோகம் செய்யும் வணிகத்தில் ஈடுபட்டிருந்த ஒரு முன்னணி அமெச்சூர் கதிரியக்க இயக்க நிறுவனமான ரெஜிலாந்து டிப்பெட்சு நிறுவனத்தில் பணிபுரிந்தார். இத்தகைய கருவிகளை உருவாக்கும் கியோர்சோவின் திறன் மற்றும் மின்னணுவியல் செயல்களை நிகழ்த்தும் திறன் காரணமாகவும், இவர் பெர்க்கிலியில் இருந்த கலிபோர்னியா பல்கலைக்கழக கதிரியக்க ஆய்வகத்தில் பணிபுரிந்த அணுக்கரு ஆய்வில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர்களுடனும் குறிப்பாக கிளென் டி. சீபார்க்கிடமும் இவருக்குத் தொடர்புகள் ஏற்பட்டது.[4]

மதிப்புறு செயல்கள்

[தொகு]

ஆல்பர்ட் கியோர்சோ பின்வரும் தனிமங்களின் இணை கண்டுபிடிப்பாளர் என்ற பெருமைக்குரியவர் [5]

குறிப்புகள்

[தொகு]
  1. Radiochemistry Society Lifetime Achievement Award
  2. Schmieder, Robert W. "Albert Ghiorso Obituary".
  3. Hoffman, Darleane C.; Ghiorso, Albert; Seaborg, Glenn T. (2000). The Transuranium People: The Inside Story. World Scientific. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1142/p074. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86094-087-3.
  4. Weil, Martin (2011-01-20). "Scientist pushed periodic table, discovered 12 elements". Washington Post: p. B5. 
  5. "Annotated Bibliography for Albert Ghiorso, The Alsos Digital Library for Nuclear Issues". Archived from the original on 2010-08-04. பார்க்கப்பட்ட நாள் 2019-09-21. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பர்ட்_கியோர்சோ&oldid=3848797" இலிருந்து மீள்விக்கப்பட்டது